தமிழகத்தின் முதலாவது மிக உய்ய அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

வெள்ளி, பெப்பிரவரி 28, 2014

600 மெகாவாட் திறனுடைய மிக உய்ய அனல் மின் நிலையம் (Super Critical Thermal Power Station) தமிழகத்தில் அமைக்கப்படவிருக்கிறது. இத்திட்டத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டினார்.


தமிழகத்தின் முதலாவது மிக உய்ய அனல் மின் நிலையமாகக் கருதப்படும் இத்திட்டத்திற்கு 4956 கோடி உரூபாய் இந்தியப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டப் பணிக்கான அனுமதியை கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச்சு 30 அன்று தமிழக அரசு வழங்கியது. சுற்றுச்சூழல் மற்றும் காட்டுவளத்திற்குரிய நடுவண் அமைச்சரகம், கடந்த சனவரி மாதத்தின் இறுதியில் இத்திட்டத்தினை துவக்குவதற்கான அனுமதியினை வழங்கியது.


இந்தப் புதிய மின் நிலையமானது 42 மாதங்களில் நிறுவப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இயங்கிவரும் எண்ணூர் அனல் மின் நிலையத்தின் வளாகத்திலேயே இந்தப் புதிய மின் நிலையம் அமையவிருக்கிறது. ஏறத்தாழ 85 ஏக்கர் நிலப்பரப்பு இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படும்.


தொழினுட்பம்

மேம்பட்ட வெப்ப வீதம், குறைவான நிலக்கரிப் பயன்பாடு, குறைவான கரியமில வாயு வெளியேற்றம், சுற்றுச்சூழலுக்கு சாதகமான செய்பணி ஆகியன இவ்வகையான மின் நிலையங்களின் உயரிய நன்மைகளாக கருதப்படுகின்றன.மூலம் தொகு