தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா
வெள்ளி, செப்டெம்பர் 24, 2010
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்பிரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆனதையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் ஐந்து நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 22ம் தேதி தொடங்கி 26 தேதியுடன் முடிவடைகிறது. இவ்விழாவினால் தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு நகரிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாளை நிறைவு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி நிறைவு விழாப்பேருரை நிகழ்த்துகிறார். இந்நிகழ்ச்சியில் இராஜராஜசோழனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது. மேலும் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நினைவாக 10 ரூபாய் நாணயமும் வெளியிடப்படுகிறது.
ஆயிரமாவது ஆண்டு நிறைவுவிழாவிற்காக தமிழ்நாடு அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கி கோயிலின் பராமரிப்பு பணிகள் உட்பட நகரின் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டது.
இவ்விழாவை ஒட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் மாணவர்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதலமைச்சர் இசுடாலின் இக்கோயிலை கட்டியது இராஜராஜனில்லை என்று சிலரால் புனையபட்டுவருவதாக வருவதாக குற்றம்சாட்டினார்.
மூலம்
தொகு- தமிழ்நாடு அரசு இணையத்தளம்
- பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவு விழா: நிறைவுப் பேருரையாற்ற முதல்வர் நாளை தஞ்சை பயணம் தட்ஸ்தமிழ், செப்டம்பர் 24,2010