ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள்
சனி, ஏப்பிரல் 16, 2016
- 11 பெப்பிரவரி 2024: நிலவில் தரை இறங்கிய ஐந்தாவது நாடானது சப்பான்
- 17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 18 ஏப்பிரல் 2016: ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: இதுவரை 34 பேர் பலி; 1000 பேர் படுகாயம்
- 17 ஏப்பிரல் 2016: ஜப்பான் நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை
- 16 ஏப்பிரல் 2016: ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள்
சப்பானின் குவாமோட்டோ நகருக்கு அருகே சனிக்கிழமை அதிகாலை இரண்டு மிகக்கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மிகவும் சக்தி வாய்ந்த 7.1 மற்றும் 7.4 அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு அடுத்தடுத்து ஏற்பட்டு, தொடர்ச்சியான அதிர்வுகளும் உணரப்பட்டது. ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பக் கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.
கியூசூ தீவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டனர். கடல் நீரில் கடுமையான சுழற்சி இருக்கும் எனவும் சப்பானிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது. பல இடங்களில் இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களை மீட்குமாறு கோரி தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக சப்பானின் தேசிய ஒலிபரப்பு நிறுவனம் கூறுகிறது. இப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நேற்று ஏற்பட்ட அதிர்வுகளில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.