சோவியத் வஸ்தோக் விண்கலம் ஏலத்தில் விற்கப்படவிருக்கிறது
வியாழன், பெப்பிரவரி 24, 2011
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 15 திசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது
1961 ஆம் ஆண்டில் விண்ணுக்கு ஏவப்பட்ட சோவியத் விண்கலம் ஒன்றை முதல் மனிதன் விண்ணுக்குச் சென்ற 50வது ஆண்டு நிறைவு நாளான ஏப்ரல் 12 ஆம் நாள் தாம் ஏலத்தில் விடவிருப்பதாக சோதெபி ஏல நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
யூரி ககாரினை விண்ணுக்கு ஏற்றிச் சென்ற வஸ்தோக் 3KA-3 என்ற விண்கலத்தின் இரட்டையர்களில் ஒன்றான வஸ்தோக் 3KA-3 என்ற விண்கலமே ஏலத்தில் விடப்படவிருக்கிறது.
ககாரின் விண்ணுக்குச் செல்லுவதற்கு 20 நாட்களுக்கு முன்னர் வஸ்தோக் 3KA-3 விணுக்கு ஏவப்பட்டது. அதில் இவான் இவானவிச் என்ற பெயருடைய மனித உருப்படிமம் ஒன்றும் ஸ்வெஸ்டோச்கா (சிணிய விண்மீன்) என்ற பெயருடைய உயிருள்ள நாய் ஒன்றும் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இந்த விண்கலம் நேற்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது 2 மில்லியன் முதல் 10 மில்லியன் அமெரிக்க டாலர் வரை ஏலத்தில் விற்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் உருசியர்களிடம் இருந்து வாங்கியவர் 50 ஆம் ஆண்டு நிறைவு தினத்தில் இதனை விற்பது பொருத்தமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்
தொகு- Sotheby's to auction Soviet space capsule, ரியா நோவஸ்தி, பெப்ரவரி 24, 2011