செயற்கைக்கோள்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை அமைக்க உருசியா திட்டம்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், ஆகத்து 22, 2012

செயற்கைக்கோள்கள் அமைக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க உருசியா திட்டமிட்டுள்ளதாக அறிவிகப்பட்டுள்ளது. தலைநகர் மாஸ்கோவிற்கு வெளியே சோல்க்கோவா என்ற இடத்திலேயே இத்தொழிற்சாலை அமைக்கப்படவிருப்பதாக மாஸ்கோ பிராந்திய ஆளுனர் செர்கே சோயிகு இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


“இது ஒரு புதிய தொழிற்சாலையாக இருக்கும்,” எனத் தெரிவித்த சோயிகு, புதிய ஆய்வு நிலையம் ஒன்றும் நிறுவப்படும் எனக் கூறினார்.


ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 600 தகவற்தொடர்பு மற்றும் அவதானிப்பு செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்படும். இதன் மூலம் சுமார் 1,000 பேர் வேலை வாய்ப்பைப் பெறுவர். இத்தொழிற்சாலை “சுற்றுச்சூழலுக்கு சுத்தமானதாகவும்" இருக்கும் எனவும் ஆளுனர் தெரிவித்தார்.


மூலம்

தொகு