சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் குண்டுவெடிப்பு

வெள்ளி, மே 2, 2014

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் நேற்று காலை 7.15 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தது. இதில் ஒரு பெண் கொல்லப்பட்டார்; 14 பேர் காயம் அடைந்தனர்.


கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரிலிருந்து சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் வழியாக இயக்கப்படும் குவகாத்தி விரைவுத் தொடர்வண்டி நேற்று வியாழக்கிழமை காலை 7.10 மணிக்கு வந்து சேர்ந்தது. அப்போது அந்த ரயிலில் தூங்கும் வசதி கொண்ட பெட்டி எண் S - 5இல் 70ஆம் நம்பர் இருக்கைக்கு அடியில் குண்டு இருந்து வெடித்தது.


மூலம் தொகு