சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதம் துவங்கும்

திங்கள், சூன் 16, 2014

சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து 20 ஆயிரம் கோடி செலவில் நடந்து வருகிறது. முதல்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் போக்குவரத்து செயல்படுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதற்கான சேவை ரயில் குளு குளு வசதி செய்யப்பட்டதாக இருக்கும்.


இந்த சேவையைப் பயன்படுத்த சீசன் டிக்கட்கள் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப்பதிலாக டோக்கன், மற்றும் ஸ்மார்ட் கார்டு முறை பயன்படுத்தப்படும். குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும் படிப்படியாக 15 ரூபாய், 20 ரூபாய் என்று வசூலிக்கப்படும்.


மூலம் தொகு