சூரிய ஆற்றலில் இயங்கும் விமானம் எசுப்பானியாவில் இருந்து மொரோக்கோ சென்றடைந்தது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், சூன் 6, 2012

ஐரோப்பாவின் எசுப்பானியாவின் மாத்ரித் நகரில் இருந்து புறப்பட்ட சூரிய ஆற்றலில் இயங்கும் விமானம் ஒன்று 19 மணி நேரப் பறப்பின் பின்னர் மொரோக்கோ நாட்டில் ராபட் நகரில் தரையிறங்கியது. இந்த விமானத்தை பேட்ரண்டு பிக்கார்ட் என்பவர் இயக்கினார்.


சூரியத் தூண்டல் சூரிய ஆற்றல்-விமானம்

கரிமநாரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விமானத்தில் 12,000 சூரியக் கலங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக இதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏர்பஸ் ஏ430 இன் வடிவத்தை ஒத்த இந்த விமானம் சராசரி தானுந்து ஒன்றின் பருமனையே கொண்டுள்ளதாக அவர்கள் கூறினர்.


2014 ஆம் ஆண்டில் இந்த விமானத்தில் உலகச் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்வதற்கு இவர்கள் திட்டமிடுகின்றனர். 2,500 கிமீ தூரப் பயணம் மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் ஆரம்பமானது.


சூரியத் தூண்டல் (Solar Impluse) என்ற இத்திட்டத்தை பேர்ட்ரண்டு பிக்கார்ட், சுவிட்சர்லாந்தின் விமானி ஆந்திரே போஷ்பர்க் என்பவருடன் இணைந்து 2003ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். இவர்களின் முதல் பயணம் சென்ற மாதம் சுவிட்சர்லாந்தில் இருந்து மாத்ரிது வரை மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்டமாகவே மாத்ரிதில் இருந்து ஆப்பிரிக்காவின் மொரோக்கோ வரை பயணம் மேற்கொண்டார்.


2010 சூலை மாதத்தில் இவர்களது விமானம் முதற்தடவையாக 26 மணி நேரம் தொடர்ந்து பயணித்த மனிதரால் இயக்கப்பட்ட சூரிய ஆற்றல் விமானம் என்ற உலக சாதனையைப் படைத்தது. 2014 ஆம் ஆண்டில் இவர்கள் உலகைச் சுற்றிவரத் தீர்மானித்துள்ளார்கள்.


மூலம்

தொகு