சூரியனை ஒத்த விண்மீனைச் சுற்றும் கோளின் "முதல்" படம் உறுதிப்படுத்தப்பட்டது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, சூலை 2, 2010


எமது சூரியனை ஒத்த விண்மீனைச் சுற்றி வரும் புறக்கோள் ஒன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதல் தடவையாகப் படம் பிடித்ததாக உரிமை கோரும் வானியலாளர்கள், இப்போது அதனை உறுதி செய்துள்ளனர்.


ஹவாயில் உள்ள ஜெமினை வடக்கு நுண்காட்டி மூலம் 2008 செப்டம்பரில் 1RXS 1609 என்ற புறக்கோளின் படத்தை வானியலாளர்கள் எடுத்தனர். அப்போது விண்மீனுக்கு முன்னால் தெரிந்த அந்த பிரகாசமான புள்ளி உண்மையில் அந்தப் புறக்கோளுடையது தானா என்தை உறுதியாகக் கூறுவதற்கு அவர்களிடம் போதுமான தரவுகள் இருக்கவில்லை.


இதற்குப் புன்னர் சில மாதங்களின் பின்னர் வேறு வானியலாளர்கள் பலர் புறக்கோள்கள் பலவற்றைப் படம் பிடித்ததாகக் கூறியிருந்தனர்.


1RXS 1609 புறக்கோளை ஆய்ந்த குழுவினர் ஜெமினையில் இருந்து பெறப்பட்ட புதிய படங்கள் மற்றும் தரவுகளைக் கொண்டு தமது 2008 ஆம் ஆண்டு புகைப்படம் உண்மையில் 1RXS 1609 உடையது தான் என உறுதியாகத் தெரிவித்திருக்கின்றனர்.


"ஆரம்பத்திலேயே இந்தப் புறக்கோளும் அதன் விண்மீனும் பொடுவான ஒரு ஈர்ப்பினால் பிணைக்கப்பட்டிருந்ததை நாம் ஊகித்தோம். இப்போது அதற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன," என்றார் கனடாவின் மொண்ட்றியால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் லாஃப்ரெனியேஎர் தெரிவித்தார்.


"இரண்டும் உண்மையில் ஈர்ப்பினால் பிணைக்கப்பட்டு இரண்டும் ஒரே திசையில் ஒரே வேகத்தில் விண்ணில் சுற்றி வருகின்றன."


இத்தரவுகள் மூலம் இந்தக் கோளின் திணிவு, மற்றும் சுற்றுத்தூரம் போன்றவற்றை அறியக்கூடியதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.


வியாழனை விட இக்கோள் 8 மடங்கு எடை கூடியதாகவும், ஏனைய புறக்கோள்களை விட இது எடையில் குறைந்ததாக இருப்பதாகவும் இக்கோளை ஆயும் குழுவினர் தெரிவித்தனர். தனது சூரியனில் இருந்து 31 பில்லியன் மைல் துரத்தில் அதனைச் சுற்றி வருகிறது. இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரத்தை விட 330 மடங்கு அதிகம்.

மூலம்

தொகு