சூரியக் குடும்பத்தில் 'மிக தொலைவில்' அமைந்துள்ள வான் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது

புதன், நவம்பர் 11, 2015

சூரியக் குடும்பத்தில் மிகத் தூரத்தில் உள்ள வான்பொருள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனில் இருந்து 15.5 பில்லியன் தூரத்தில், அதாவது புளூட்டோவை விட மூன்று மடங்கு தூரத்தில், உள்ள இப்பொருளை சப்பானின் சுபரூ தொலைநோக்கி மூலம் அவர்கள் அவதானித்தனர்.


வி774104 என அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள இப்பொருள் 500-1000கிமீ பருமன் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவம் பற்றி அறிய இது மேலும் பல காலம் அவதானிக்கப்பட வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.


முன்னர் ஏரிசு என்ற குறுங்கோளே சூரியனில் இருந்து மிகத் தூரத்தில் அமைந்துள்ள வான்பொருள் என நம்பப்பட்டு வந்தது. இதன் இயற்கைத் துணைக்கோளான டிசுனோமியா சூரியனில் இருந்து 5.7 முதல் 14.6 பில்லியன் வரையான தூரத்தில் உள்ளது.


வி774104 வான்பொருள் 66 முதல் 140 பில்லியன் கிமீ தூரம் ஆழமாகச் செல்லக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மூலம் தொகு