சூடான் அரசுத் தலைவர் பசீர் மீது இரண்டாவது சர்வதேசப் பிடியாணை
செவ்வாய், சூலை 13, 2010
- 28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 9 ஏப்பிரல் 2015: தெற்கு சூடான் இன வன்முறைகளில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்
- 15 மே 2014: சூடானில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய பெண்ணுக்கு மரணதண்டனை தீர்ப்பு
- 25 ஏப்பிரல் 2013: தார்பூர் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட செர்போ சூடானில் கொல்லப்பட்டார்
- 12 ஏப்பிரல் 2013: சூடான் தலைவர் ஒமார் அல்-பசீர் தெற்கு சூடானுக்கு அரசு முறைப் பயணம்
சூடான் அரசுத்தலைவர் ஓமார் அல்-பசீர் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் இரண்டாவது தடவையாக பிடியாணையைப் பிறப்பித்திருக்கிறது. இம்முறை இனப்படுகொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போர்க்குற்றம், மற்றும் மனித உரிமை மீறல் போன்ற குற்றங்களுக்காக இவர் மீது முன்னர் வழக்குப் பதிவாகியிருந்தது. இக்குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்திருந்தார்.
கடந்த 2009 மார்ச் மாதத்தில் முதற் தடவையாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் இவர் மீது பிடியாணை பிறப்பித்திருந்தது. ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை.
புதிய குற்றச்சாட்டுகக்ள் குறித்து பசீரின் கட்சி உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், "இது அபத்தமானது," என்றார். ஆனால் மேற்கு தார்பூர் பகுதியில் இயங்கும் போராளை அமைப்புகள் இதனைப் பெரும் "வெற்றி"யாக அறிவித்துள்ளனர்.
ஏழாண்டுகளாக இடம்பெற்ற போரில் 300,000 பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு அரசுத்தலைவர் பசீரே பொறுப்பு எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தொடர்புள்ள செய்திகள்
தொகுமூலம்
தொகு- Darfur warrant for Sudan's Bashir: ICC adds genocide, பிபிசி, ஜூலை 12, 2010
- International Criminal Court charges Sudan president with genocide, டைம்ஸ் ஒஃப் இந்தியா, ஜூலை 13,2010