சுலோவீனியாவில் இரண்டாம் உலகப்போர்க் கால மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு
புதன், செப்டம்பர் , 2010
இரண்டாம் உலக்ப் போரின் இறுதிக்கால மனிதப் புதைகுழியொன்று சுலோவீனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரிவால்ச்சி என்ற நகரிற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த 20 மீட்டர் நீளப் புதிகுழியில் சுமார் 700 ஆண்கள், மற்றும் பெண்களுடைய எச்சங்கள் புதைக்கப்பட்டுள்லதாக அரசு அதிகாரி மார்க்கோ ஸ்டோவ்சு என்பவர் தெரிவித்தார். இவர்களில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஏனையோர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் நாசி செருமனியினருக்கு உளவு பார்த்தவர்கள் என்றும், பாசிசத்துக்கு எதிரான கம்யூனிசவாதிகளால் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலர் அணிந்திருக்கும் பாதணிகளைக் கொண்டு அவர்கள் சாதாரன பொது மக்கள் என அடையாளம் காணலாம் என மார்க்கோ ஸ்ட்ரோவ்சு கூறினார். கைகள் பின்பக்கமாகக் கட்டப்பட்ட நிலையிலேயே அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வடக்கு சுலோவீனியாவின் பிரிவால்ச்சிக் காட்டில் பெருந்தொகையானோர் கொல்லப்பட்டதை தாம் ஒளிந்திருந்து கண்டதாக ஒரு சிறுவன் தெரிவித்ததாக அண்மையில் இங்கு வதந்திகள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் நாசிகளுக்கு ஆதரவானவர்கள் ஆயிரக்கணக்கில் கம்யூனிஸ்டுகளினால் கொல்லப்பட்டனர். அத்துடன் சாதாரண பொதுமக்களையும் இவர்கள் படுகொலை செய்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
மூலம்
தொகு- "Word War II mass grave found in Slovenia". பிபிசி, செப்டம்பர் 7, 2010
- 700 bodies found in WWII-era mass grave, ஏபிசி, செப்டம்பர் 8, 2010