சீன நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்தில் 22 பேர் உயிரிழப்பு
புதன், சூன் 4, 2014
சீனாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 17 பெப்ரவரி 2025: சந்திரனில் இறங்கி ஆய்வு நடத்த விண்ணுலவி ஒன்றை சீனா ஏவியது
- 17 பெப்ரவரி 2025: சீனா: 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: சாலையோர உணவகத்தில் சீன ஜனாதிபதி
- 17 பெப்ரவரி 2025: சீனாவின் கான்சு மாகாணத்தில் பெரும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு
சீனாவின் அமைவிடம்
சீனாவின் தென்மேற்கே வான்ஷெங் மாவட்டத்தில் சொங்கிங் என்ற நகரில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் இடம்பெற்ற இவ்விபத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர். விபத்து நடந்த போது மொத்தம் 28 பேர் இச்சுரங்கத்தில் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகில் சுரங்க விபத்துகள் சீனாவிலேயே அதிகம் இடம்பெறுகின்றன என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூலம்
தொகு- சீனாவில் சுரங்க விபத்து: 22 பேர் பலி, தினமலர், சூன் 4, 2014
- China coal mine accident kills 22, தி கார்டியன், சூன் 4, 2014