சீனாவில் நிலக்கரிச் சுரங்க வெடிப்பில் 46 பேர் உயிரிழப்பு

This is the stable version, checked on 9 அக்டோபர் 2010. Template changes await review.

செவ்வாய், சூன் 22, 2010


மத்திய சீனாவின் எனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் பெரும் வெடிப்பு நிகழ்ந்ததில் 46 பேர் உயிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


சீனாவில் எனான் மாகாணம்

72 பேர் சுரங்கத்தில் பணியில் இருந்த போது நேற்று திங்கட்கிழமை அதிகாலை இந்த வெடிப்பு நிகழ்ந்தது. அவர்களில் 26 பேர் மீட்கப்பட்டுள்ளதாக என்று சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு மட்டும் 2,631 பேர் சுரங்க வெடிப்புக்குப் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வமாகக் கூறப்படுகிறது.


ஆனால் அந்த எண்ணிக்கையைவிட அதிகமானோர் மாண்டிருக்கக்கூடும் என்றும், மதிப்புமிக்க நிலக்கரிச் சுரங்கங்கள் மூடப்பட்டு விடாமல் பல விபத்துகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன என்று தனிப்பட்ட ஊழியர் குழு ஒன்று கூறியுள்ளது.


சீனாவில் அடிக்கடி நிலக்கரிச் சுரங்க வெடிப்பு விபத்து நிகழ்கிறது. இதற்குக் காரணம் நிலக்கரிச் சுரங்களில் நிலவும் எளிதாக விபத்து நடக்கக்கூடிய வேலைச் சூழல், ஊழியர்களுக்குச் சரியான விதிமுறைகள் வகுக்கப்படாமை, ஊழல், திறனற்ற பணி முறை ஆகியவையே என்று கூறப்படுகிறது.


சீனாவின் மின்சாரத் தேவையில் 70 விழுக்காடு அளவு நிலக்கரி வாயிலாகவே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்