சீனாவின் மனித இயக்க நீர்மூழ்கிக் கப்பல் 5,057 மீட்டர் ஆழத்தை அடைந்தது

வியாழன், சூலை 28, 2011

ஜியாலோங் (Jiaolong) என அழைக்கப்பெறும் சீனாவின் மனித இயக்க நீர் மூழ்கிக் கப்பல், வெற்றிகரமாக 5,057 மீட்டர் ஆழம் வரை மூழ்கியுள்ளது.


மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் அனைத்துலக பசிபிக் பெருங்கடலில் நிகழ்த்திய பரிசோதனை மாபெரும் வெற்றி கண்டதாக ஸ்டேட் ஓசியானிக் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு (SOA) தெரிவித்துள்ளது. ஸ்டேட் ஓசியானிக் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பின் துணை இயக்குனர், திரு வாங் பை (Wang Fei) இதனால் "ஜியாலோங் நீர்மூழ்கியால் கடல்பரப்பின் 70 விழுக்காடு இடங்களை அடைவதற்கு தகுதி பெற்றுள்ளது" எனக் கூறினார். இது மேலும் 2012 ஆம் ஆண்டில் 7000 மீட்டர் ஆழத்திற்கு செல்லும் சாதனை படைப்பதற்கு வழி வகுக்கும் என்று திரு வாங் கூறினார்.


இது வரையில். மிகவும் ஆழத்தை எட்டிய கப்பல் ஜப்பான் நாட்டின் சின்கையாகும் (Shinkai), அது 1989 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 6500 மீட்டரையும் தாண்டி 6527 மீட்டரை எட்டியது.


"5000 மீட்டர் ஆழத்தில், ஜியாலோங் ஒரு சதுர மீட்டருக்கு 5000 டன் எடையைத் தாங்கிக்கொண்டது" என்று வாங் கூறினார்.


இந்தக் கப்பலை வடிவமைத்த முதன்மை வடிவமைப்பாளர் ஆகிய க்சு க்வினான் (Xu Qinan) கூறியதாவது உலகத்தில் 7000 மீட்டர் ஆழம் வரை செல்வதற்காக மனிதன் வடிவமைத்த முதல் நீர் மூழ்கிக் கப்பல் ஜியாலோங் ஆகும்.


உள்ளூரிலேயே தயாரித்த ஜியாலோங், தொன்மையான கடல் நாகத்தின் பெயர் கொண்டது, கடந்த வியாழன் அன்று சுமார் ஐந்தே மணி நேரத்தில் 4,027 மீட்டர் ஆழத்தை எட்டியது.


ஜியாலோங் திட்டத்தை 2002 ஆம் ஆண்டில் சீனா தொடங்கியது. ஒரு மனிதனை கடல் மட்டத்தின் கீழே 3,500 மீட்டர் ஆழத்திற்கும் கொண்டு செல்லும் திறமையை, அமெரிக்கா, பிரான்சு, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பிறகு வளர்த்துக்கொண்ட ஐந்தாவது நாடு சீனா ஆகும்.


மூலம்

தொகு