சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
சனி, ஆகத்து 6, 2011
தமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்பிரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
இந்தியாவில் தமிழ்நாட்டின் அமைவிடம்
தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையொன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து காரணமாக 7 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் பலத்த காயமடைந்த 5 தொழிலாளர்கள் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் இந்த பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சிறிய ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையில் சுமார் 200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் மருந்துக் கலவை செய்யும் அறையின் வெளிப் பகுதியில் சிதறிக் கிடந்த மருந்தைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றதாகவும், அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிவகாசி தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
மூலம்
தொகு- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 7 பேர் பலி, தினமணி, ஆகத்து 6, 2011
- சிவகாசி பட்டாசு விபத்து : பலி அதிகரிப்பு, தினமலர், ஆகத்து 6, 2011
- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து- 5 பேர் பலி, தட்ஸ் தமிழ், ஆகத்து 5, 2011