சாலையோர உணவகத்தில் சீன ஜனாதிபதி

This is the stable version, checked on 16 சூன் 2017. Template changes await review.

சாலையோர உணவு விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆவி பறக்கும் பன்ரொட்டிக்கு அது புகழ்பெற்ற கடை. அங்கு உணவுக்கு டோக்கன் வாங்கக் காத்திருந்தவர்கள் மத்தியில் நின்றவரை பார்த்த மக்கள் வியப்புடன் திறந்த வாய் மூடாமல் நின்றனர்.


சி சின்பிங் 2013

உணர்வு பெற்றோர் விரைந்து சென்று அவருக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அங்கு வரிசையில் நின்றவர் வேறு யாருமில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், சீன ஜனாதிபதியுமான சி ஜின்பிங் வரிசையில் நின்று உணவு வாங்கக் காத்திருந்தார். அவர் பன்றிக்கறி வைக்கப்பட்ட பன்ரொட்டி, வறுத்த ஈரல், ஒரு பிளேட் கடுகு இலை ஆகியவற்றை வாங்கிக் கொண்டு உணவகத்துக்குள் சென்றார். அதன் விலை 21 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.214) ஆகும். அவர் முன்னறிவிப்பின்றி அங்கு உணவருந்த வந்தார். எவ்விதப் பாதுகாப்பும் இன்றி வந்திருந்தார். உணவுக்குரிய கட்டணத்தை அவர் தன்பையில் இருந்து கொடுத்தார்.

மக்களோடு அமர்ந்து உணவருந்தினார். கூடியிருந்தவர்கள் அனைவரும் தங்களுடைய செல்போன் கேமிராக்களால் புகைப்படம் எடுத்த வண்ணம் இருந்தனர். அவர் மக்கள் உறவில் ஒரு வெற்றியைப் பெற்று விட்டார். அவர் அங்கு செலுத்திய 21 யுவானைக் கொண்டு, அரசு விழாக்கள் நடக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ஒரு பாட்டில் தண்ணீர் கூட வாங்க முடியாது. எனவே ஒரு தலைவர் இவ்வாறு நடந்து கொள்வது ஒரு வரவேற்கத்தக்க மாறுதலாகும் .சாலையோர உணவக நிர்வாகிகள் ஜின்பிங் தனது பாதுகாப்புப் படையினரோடு வரவில்லை என்று கூறினர். அவர்வந்தவுடன் உணவகம் மூடப்படவில்லை என்றும், மற்றவர்களுக்கு தொடர்ந்து உணவுவழங்கப்பட்டது என்றும் அவர்கள் கூறினர். ஜனாதிபதி வரப்போகிறார் என்று தங்களுக்கு தகவல் கொடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். மாறுபட்ட தலைமைப்பாணி கொண்ட ஜின்பிங் முதல் முறையாக இவ்வாறு நடக்கவில்லை.

இவ்வாண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி ஜின்பிங் பெய்ஜிங்நகரவீதிகளில் எவ்வித பாதுகாப்புமின்றி வாடகைக்காரில் பயணித்தார். அப்போது கட்சிக்கு தொடர்புடைய ஹாங்காங் செய்தித்தாளில் வெளியான இச்செய்தியை அரசுஉடனடியாக மறுத்தது. இப்போது ஜனாதிபதியுடன் மக்கள் எடுத்த புகைப்படங்கள் நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் வெளியாகி விட்டன. அரசின் செய்தி நிறுவனமான சின்குவாவில் இந்த புகைப்படங்கள் வெளியாயின.

ஆதாரங்கள்

தொகு