கோஸ்டா ரிக்காவில் 7.6 அளவு நிலநடுக்கம், இருவர் உயிரிழப்பு

வியாழன், செப்டெம்பர் 6, 2012

கோஸ்டா ரிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்
கோஸ்டா ரிக்காவின் அமைவிடம்

கோஸ்டா ரிக்காவின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

நடு அமெரிக்காவில் உள்ள கோஸ்டா ரிக்கா நாட்டின் வட-மேற்குப் பகுதியில் இடம்பெற்ற பலம் வாய்ந்த நிலநடுக்கத்தினால் இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குவானாகாஸ்ட் என்ற இடத்தில் 55 வயதுப் பெண்ணும், சுவர் இடிந்து வீழ்ந்ததில் கட்டடத் தொழிலாளி ஒருவரும் கொல்லப்பட்டனர். பெரிதளவிலான சேதம் இல்லை என அரசுத்தலைவர் லோரா சின்சில்லா தெரிவித்தார்.


தலைநகர் சான் ஓசே நகருக்கு மேற்கே 140 கிமீ தொலைவில் நிக்கோயா தீபகற்பத்துக்கு கீழே 7.6 அளவு நிலநடுக்கம் பதியப்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாயினும், பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.


தலைநகர் சான் ஒசேயிலும் சில கட்டடங்கள் குலுங்கியதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அயல் நாடுகளான நிக்கராகுவா, எல் சல்வடோர் நாடுகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.


கொஸ்டா ரிக்காவில் 2009 சனவரியில் இடம்பெற்ற 6.1 அளவு நிலநடுக்கத்தில் 34 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்

தொகு