கொங்கோ போராளிகள் கோமோ நகரினுள் நுழைந்தனர்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், நவம்பர் 20, 2012

கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்குப் பகுதியில் கோமோ என்ற முக்கியமான நகரினுள் போராளிகள் பலர் நுழைந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


நகரின் விமான நிலையத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக எம்23 என்ற போராளிகள் குழு அறிவித்துள்ளனர், ஆனாலும் ஐக்கிய நாடுகள் அமைப் படையினர் இத்தகவலை மறுத்துள்ளனர்.


கொங்கோ போர் மீண்டும் ஆரம்பிக்கலாம் என்ற அச்சத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். முன்னர் நடந்த போரில் சுமார் அந்து மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.


போராளிகளுக்கு ஆயுத உதவி வழங்குவதாக எல்லை நாடான ருவாண்டா மீது உலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. ருவாண்டா இதனை மறுத்து வருகிறது.


கோமா விமான நிலையத்தில் இருந்து அரசு படைகள் பின்வாங்கியிருந்தாலும், ஐநா அமைதிப் படையினர் அங்கு தொடர்ந்து நிலை கொண்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோமா நகரில் இருந்து அரசுப் படையினரை வெளியேற போராளிகள் 24 மணி நேர அவகாசத்தை போராளிகள் நேற்று திங்கட்கிழமை அறிவித்திருந்தனர். அரசு அதனை நிராகரித்திருந்தது. போராளிக் குழுக்களுடன் தாம் பேச்சுவார்த்தைகளில் இறங்கப் போவதில்லை என்றும், ருவாண்டாவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என அரசு அறிவித்திருக்கிறது.


மூலம்

தொகு