கொங்கோவில் மோதல்கள் காரணமாக ஐம்பதாயிரம் பேர் இடம்பெயர்வு

சனி, நவம்பர் 21, 2009


கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் வடக்கில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் நடக்கும் மோதல்கள் காரணமாக ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் தங்களின் சொந்த இடங்களிலிருந்து வெளியேறியிருப்பதாக ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.


இப்படி வெளியேறியிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள், அண்டையில் இருக்கும் கொங்கோ குடியரசுக்குள் சென்றிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.


கொங்கோ குடியரசு

இவர்களின் பலர் பெரியவர்கள் துணையின்றி ஓடிவந்த சிறார்கள் ஆவர்.


கடந்த மாதம் லொபாலா, போபா ஆகிய இனக்குழுக்களிடையே ஆரம்பித்த இந்த மோதல்களில் இதுவரை குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா.மன்ற அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. மீன்பிடித்தலுக்கான உரிமைகள் காரணமாக இம்மோதல்கள் வெடித்தன.


கொங்கோவின் கிழக்கில் நடந்து வரும் நீண்ட நாள் மோதல்களுக்கும் இந்த தற்போதைய மோதல்களுக்கும் தொடர்பு இல்லை.


ஐ.நா. அமைதிப் படையினரின் உதவியை கொங்கோ அரசாங்கம் கோரியிருக்கிறது. ஆனால் இதுவரை சுமார் 30 பேர் வரை மட்டுமே அந்த பிராந்தியத்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மூலம் தொகு