கென்ய உலங்கு வானூர்தி விபத்தில் உட்துறைப் பாதுகாப்பு அமைச்சர் உயிரிழப்பு
ஞாயிறு, சூன் 10, 2012
- 2 ஏப்பிரல் 2015: கென்யாவின் காரிசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 70 பேர் பலி
- 14 சூன் 2014: ஆப்பிரிக்கக் காடுகளில் 2013ஆம் ஆண்டில் 20,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன
- 23 செப்டெம்பர் 2013: நைரோபி வணிக வளாகத் தாக்குதல், 69 பேர் உயிரிழப்பு, மேலும் பலர் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ளனர்
- 11 செப்டெம்பர் 2013: கென்யாவின் வறண்ட துர்க்கானா பகுதியில் நீர்த்தேக்கம் கண்டுபிடிப்பு
- 7 ஆகத்து 2013: பெரும் தீயை அடுத்து நைரோபி விமான நிலையம் மூடப்பட்டது
கென்யாவில் உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த கென்ய உட்துறைப் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் சைட்டோட்டி கொல்லப்பட்டார் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சரும் (அகவை 66) அவரது உதவி அமைச்சரும் பயணம் செய்த உலங்கு வானூர்தி இன்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் நைரோபியின் மேற்கே கீழே வீழ்ந்து தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்கள், மற்றும் அவர்களது பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஆறு பேருடைய எரிந்த உடல்கள் மீட்கப்பட்டதாக ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
முன்னாள் உதவி அரசுத்தலைவரான சைட்டோட்டி சோமாலியாவின் அல்-சபாப் என்ற போராளிக் குழுவை வெகுவாக விமரிசித்து வந்தவர். எதிர்வரும் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடவிருந்தார். தற்போதைய அரசுத்தலைவர் கிபாக்கியின் பதவிக்காலம் 2013 சனவரியுடன் நிறைவடைகின்றது. பிரதமர் ரைலா ஒடிங்கா தானும் இத்தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்திருந்தார். டிசம்பர் 2007 இல் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலை அடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது 1,500 பேர் கொல்லப்பட்டனர்.
மூலம்
தொகு- Kenyan minister George Saitoti killed in helicopter crash, பிபிசி, சூன் 10, 2012
- Kenya security minister killed in chopper crash, ராய்ட்டர்ஸ், சூன் 10, 2012