கென்யா இனமோதலில் 52 பேர் உயிரிழப்பு
வியாழன், ஆகத்து 23, 2012
- 2 ஏப்பிரல் 2015: கென்யாவின் காரிசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 70 பேர் பலி
- 14 சூன் 2014: ஆப்பிரிக்கக் காடுகளில் 2013ஆம் ஆண்டில் 20,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன
- 23 செப்டெம்பர் 2013: நைரோபி வணிக வளாகத் தாக்குதல், 69 பேர் உயிரிழப்பு, மேலும் பலர் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ளனர்
- 11 செப்டெம்பர் 2013: கென்யாவின் வறண்ட துர்க்கானா பகுதியில் நீர்த்தேக்கம் கண்டுபிடிப்பு
- 7 ஆகத்து 2013: பெரும் தீயை அடுத்து நைரோபி விமான நிலையம் மூடப்பட்டது
கென்யாவின் தென்கிழக்கே இரு இனங்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாக கென்யக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கென்யாவின் கரையோர மாகாணத்தின் தானா ஆற்று மாவட்டத்தில் செவ்வாய் மாலையில் ஓர்மா மற்றும் பொக்கோமோ ஆகிய இரு குழுக்களிடையே மோதல் வெடித்தது. பெண்களும் குழந்தைகளும் கத்திகளால் குத்தப்பட்டு மடிந்தனர். மேலும் பலர் குடிசைகளில் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
கால்நடைகளை மேய்ப்பதற்கான உரிமைப்பிரச்சினையே வன்முறைக்குக் காரணம் என நம்பப்படுகிறது. ஆரம்பகட்ட விசாரணைகளின் படி ஓர்மா இனத்தவர்கள் மீது பொக்கோமோக்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு இனத்தவர்களுக்கும் இடையே அண்மைக்காலத்தில் வன்முறைகள் அடிக்கடி நிகழ்வது வழக்கம் எனவும், ஆனால் இவ்வளவு மோசமாக நடந்ததில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
2001 ஆம் ஆண்டில் இதே பகுதியில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டனர்.
மூலம்
தொகு- Kenya clashes kill dozens in Coast Province, பிபிசி, ஆகத்து 23, 2012
- 48 dead in Kenyan clashes over land, ஜமைக்கா ஒப்சர்வர், ஆகத்து 23, 2012