கென்யா அரசுத்தலைவர் தேர்தலில் உகுரு கென்யாட்டா வெற்றி

சனி, மார்ச்சு 9, 2013

கென்யாவில் கடந்த திங்களன்று இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் பிரதிப் பிரதமர் உகுரு கென்யாட்டா வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


86% வாக்குகள் பதிவான இத்தேர்தலில் கென்யாட்டா 50.07% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஆனாலும், இவரது முக்கிய போட்டியாளர் பிரதமர் ரைலா ஒடிங்கா தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும், தேர்தல் முடிவுகளுக்கு எதிராகத் தாம் வழக்குத் தொடரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


2007 இல் நாட்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் இடம்பெற்ற வன்முறைகளைத் தூண்டியமைக்காக கென்யாட்டா மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது நாட்டில் இடம்பெற்ற இனமோதல்களில் குறைந்தது 1,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 600,000 பேர் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர். தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு


இம்முறை தேர்தல்கள் மிகுந்த சிக்கல் நிறைந்ததாக இருந்தாலும், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இடம்பெற்றதாக சுயாதீனத் தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. எப்போதும் இல்லாதவாறு பெருந்தொகையானோர் வாக்களித்துள்ளதாகவும் இக்குழு தெரிவித்துள்ளது.


மூலம் தொகு