காட்டுத்தீயில் இருந்து அணுஆற்றல் ஆலையைக் காப்பாற்ற உருசியா போராட்டம்

வெள்ளி, ஆகத்து 6, 2010

உருசியாவில் உள்ள மாசுக்கோ நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இருந்து இராணுவ இடங்களையும், அணு ஆலைகள் பகுதியையும் விபத்துககள் ஏற்படாமல் இருக்க மீட்புப் பணியாளர்கள் போராடி வருகின்றார்கள்.


நச்சுக்காற்றைப் போன்று அந்நகரெங்கும் புகை மண்டலமாக உள்ளதினால் அங்குள்ள மக்கள் அனைவரும் சுவாசப் பாதுகாப்பு உரையை அணிந்து உலவுகின்றனர்.


இதை அடுத்து அந்நகரிற்கு வந்து போகும் சுமார் 120 விமானங்கள் தாமதமாக்கப்பட்டது. இந்த காட்டுத்தீப் புகையினால் 52 பேர் இதுவரை இறந்துள்ளனர்.


அந்நாட்டு அரசு குறிப்பிட்டதில் இருந்து அதிகாரிகளும் தீயணைப்புப் படைகளும் தாமதமாக தீப்பற்றிய இடங்களுக்கு சென்றதினாலேயே இந்தத் தீ வெகுவாகப் பரவியுள்ளது என்று தெரிகிறது. இதனால் அதிகாரிகள் இராணுவத்தினையும் எச்சரித்துள்ளார்கள்.


இந்த தீயினால் அருகில் உள்ள அணுவாற்றல் ஆலைகளில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் இராணுவ ஆயுதங்கள் இருக்கும் பகுத்திக்கும் பரவ சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளது.


மொத்தம் இந்த தீ 528 இடங்களில் சுமார் 179,600 எக்டேர் நிலப்பரப்பில் பரவியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதே போன்று 1986 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் தீ பரவி அருகில் உள்ள செர்னோபில் அணு ஆலையில் தீப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு