கரூர் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து, 30 பேர் படுகாயம்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, நவம்பர் 22, 2015

தமிழ்நாடு, கரூர் அருகே அரசுப் பேருந்து ஒன்று இன்று கவிழ்ந்ததில், சுமார் 30 பேர் வரை படுகாயம் அடைந்தனர்.


கோவையில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கரூர் அருகே காந்திகிராமம் பகுதியை அடுத்த பெட்ரோல் பங்க் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அப்போது அந்த சாலையில் திடீரென நாய் குறுக்கே வந்ததாலும், மழையினாலும் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஒரத்தில் உள்ள பள்ளத்தில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் சுமார் 7 பேர் கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கும், மீதமுள்ள நபர்கள் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் இச்சம்பவம் குறித்து பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்திற்கு காரணமான நாய் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி இறந்தது. கடும் மழையில் இவ்விபத்து ஏற்பட்டது.


இச்சம்பவத்தால் கரூரிலிருந்து திருச்சிக்கு செல்லும் போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இச்சம்பவமறிந்த கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஜெ பேரவை மாவட்ட செயலாளருமான எஸ். காமராஜ் சம்பவத்தில் பாதிக்கபட்டவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


மூலம்

தொகு
 
Wikinews
இக்கட்டுரை விக்கிசெய்திகளின் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட நேரடிச் செய்தியாகும்.