கம்போடியாவின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரிக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கக் கோரிக்கை

வியாழன், நவம்பர் 26, 2009


கம்போடியாவின் கெமரூச் கம்யூனிசச் சிறைச்சாலையின் முன்னாள் பிரதம அதிகாரியான டுச் புரிந்த குற்றங்களுக்காக 40 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டுமென வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடினர்.


ஐநாவின் ஆதரவுடன் இயங்கும் கம்போடியாவின் போர்க் குற்ற நீதிமன்றத்தில் கையிங் குவெக் ஈவ் என்ற இயற்பெயருடைய டுச் மீதான வழக்கு விசாரணை நடந்து வருகின்றது. கடந்த புதன்கிழமை இவர் மீதான வழக்கு விசாரிக்கப்படுகையில் வழக்குரைஞைர்கள் இக்கோரிக்கை மனுவை முன்வைத்தனர்.


கம்போடியாவில் பொல்பொட் போராளிகளின் ஆட்சி நிலவிய போது 1970 ல் இரண்டு மில்லியன் கம்போடியர்கள் கொல்லப்பட்டனர். அந்நேரம் டூவொல் சிலெங் சிறைச்சாலையில் பிரதம அதிகாரியாகக் கடமையாற்றிய டுச் 15,000 பேரின் படுகொலைகளை மேற்பார்வையிட்டார். புதன்கிழமை டுச் தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் அதற்காக பகிரங்க மன்னிப்பும் கோரினார்.


67 வயதுடைய டுச் மீதான வழக்கின் இறுதித் தீர்ப்பு மார்ச் மாதம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பொல்பொட் ஆட்சியில் நடந்த கொலைகள் மோசடிகளை விசாரிக்க ஐ.நா.வின் அனுமதியுடன் கம்போடியா நீதிமன்றத்தை நிறுவி விசாரணை செய்து வருகின்றது.

மூலம் தொகு