ஒண்டுராசு தேர்தலை செல்லாததாக்க எதிர்கட்சிகள் கோரிக்கை

செவ்வாய், திசம்பர் 10, 2024

யுவான் ஒர்லாண்டோ எர்னான்டசு

கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலை செல்லாததாக்க தேர்தல் ஆணையத்திற்கு எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.


அந்த தேர்தலில் ஆளும் கட்சியின் தற்போதைய அதிபர் யுவான் ஒர்லாண்டோ எர்னான்டசு எதிர்கட்சிகளின் வேட்பாளர் சால்வடோர் நசுரல்லாவை விட 1.6% வாக்குகள் அதிகம் பெற்று வென்றதாக அறிவிக்கப்பட்டது.


சால்வடோர் நசுரல்லா

தேர்தலில் தில்லுமுல்லு செய்ததாக கூறப்பட்டதால் தெருக்களில் வன்முறை வெடித்துள்ளது. அமெரிக்க நாடுகளின் அமைப்பின் (OAS) வேண்டுதலின் படி 5,000 வாக்கு பெட்டிகள் மீண்டும் எண்ணப்படுகின்றன. மீண்டும் எண்ணப்படுவதின் முடிவு திங்கள் கிழமைக்குள் வெளியிடப்படவேண்டும்.


தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நவம்பர் 26இக்கு முன்பு தில்லுமுல்லு அரங்கேறியதாக எதிர்கட்சி கூறுகிறது.


இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இது வரை 14 பேர் இறந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகியதாக தெரிகிறது.


இறுதி முடிவு டிசம்பர் 26இக்குள் வெளியிட தலைமை தேர்தல் ஆணையத்திற்கு காலம் உள்ளது.

மூலம்

தொகு