ஐந்து மணி நேரம் விமான இறக்கையில் பயணம் செய்த சிறுவன்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், ஏப்பிரல் 23, 2014

அமெரிக்காவில் விமான சக்கர பகுதியில் ஒளிந்திருந்து சிறுவன் ஒருவன் பயணம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானம் தரையிறங்கும் போது பாதுகாப்பாக கீழே குதித்து உயிர் தப்பினான்.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான்டா கிளாரா என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டில் நடந்த சண்டையால் அருகில் இருந்த சான் ஓசே விமான நிலையத்திற்குச் சென்றான். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஹவாய் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் ஒழிந்து கொண்டான். அந்த விமானம் ஹவாய் தீவில் உள்ள மவு என்ற ஊரில் அமைந்துள்ள காகுலை விமான நிலையத்தில் இறங்கியது. அப்போது அச்சிறுவன் கீழே குதித்து உயிர் தப்பினான்.


12 ஆயிரம் மீட்டர் உயரத்தில் விமானம் பறக்கும் போது காற்றில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். அத்துடன் வெப்பநிலையும் -62 செல்சியசாக இருந்தது. சுமார் 5 மணி நேரம் பயணம் செய்து இச்சிறுவன் அதிசயமாக உயிர்தப்பினான். இச்சம்பவம் குறித்து சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


2010 ஆம் ஆண்டில் 16 வயது சிறுவன் ஒருவன் நியூயார்க்கில் இருந்து பாஸ்டன் சென்ற விமான இறைக்ககளுக்கிடையே பயணம் செய்து தனது உயிரை மாய்த்தான். 1947 முதல் 2012 வரை இவ்வாறான 96 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 23 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.


மூலம்

தொகு