ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3 இறுதிச்சுற்றில் சாய்சரண் வெற்றி

ஞாயிறு, செப்டெம்பர் 25, 2011

விஜய் தொலைக்காட்சி நடத்திய ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3 பாட்டுப்போட்டியின் இறுதிச் சுற்றில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3 பட்டத்தை சாய்சரண் வென்றார்.


இறுதிச் சுற்று நேயர்களின் முன்னிலையில் மிகவும் வெள்ளிக்கிழமை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் செண்டர், நந்தம்பக்கத்தில் நடைபெற்றது. இரண்டு வாரங்களாக நடந்த இறுதிச் சுற்றில் அதிக வாக்குகளின் அடிப்படையில் நான்கு போட்டியாளர்கள் சத்யபிரகாஷ், பூஜா, சாய்சரண், சந்தோஷ் ஆகியோர் பங்குபற்றினர். இவர்களின் வெற்றி, பார்வையாளர்களின் வாக்குகளின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது.


கடந்த ஆண்டு சூலையில் ஆரம்பமான இப்போட்டித் தொடரில் இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல், கனடா, சிங்கப்பூரில் இருந்தும் இளம் பாடகர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு கட்டங்களாக இப்போட்டி இடம்பெற்றது. போட்டி நடுவர்களாக பின்னணிப் பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், உன்னிகிருஷ்ணன், சுஜாதா ஆகியோர் பங்குபற்றினர்.


வெற்றிபெற்ற போட்டியாளர் சாய்சரண் ரூபாய் 40லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றைப் பரிசாகப் பெற்றார். இரண்டாவதாக வந்த சந்தோஷ் டாடா விஸ்டா காரையும், மூன்றாவதாக வெற்றி பெற்ற சத்யபிரகாஷ் ரூபாய் மூன்று லட்சத்தையும், நான்காவதாக வந்த பூஜா ரூபாய் ஒரு லட்சத்தையும் பரிசாகப் பெற்றனர்.


மூலம் தொகு