ஏமன் வன்முறைகளில் 37 பேர் உயிரிழப்பு

புதன், சூன் 1, 2011

ஏமன் தலைநகர் சனாவில் நேற்று இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


பழங்குடி கூட்டமைப்பு ஒன்றின் தலைவர் சேக் சாதிக் அல்-அக்மர் என்பருக்கு ஆதரவான போராளிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்ததை அடுத்து வன்முறைகள் ஆரம்பித்துள்ளன. இவ்வன்முறைகள் ஏமனில் உள்நாட்டுப் போர் ஒன்றை ஏற்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படூம் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.


அரசுத்தலைவர் அலி அப்துல்லா சாலி பதவி விலகுவதற்கு மறுத்துள்ளதைத் தொடர்ந்து அங்கு பல இடங்களில் முறுகல் நிலை தொடர்கின்றன.


ஆளும் பொது மக்கள் காங்கிரசுக் கட்சியின் தலைமையகம் மற்றும் சில கட்டடங்களை பழங்குடியினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.


33 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் சாலியைப் பதவியில் இருந்து விலகுமாறு அண்மையில் அமெரிக்க அரசுத் திணைக்களத்தின் பேச்சாளர் கேட்டுக் கொண்டிருந்தார்.


மூலம் தொகு