ஏமன் தலைவர் சாலே பதவி துறக்கத் தயார் என அறிவிப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, ஏப்பிரல் 24, 2011

ஏமன் அரசுத்தலைவர் அலி அப்துல்லா சாலே தனது 32 ஆண்டு கால ஆட்சியை அடுத்து இடம்பெற்ற வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அடுத்த 30 நாட்களுக்குள் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.


ஏமன் அரசுத்தலைவர் அலி அப்துல்லா சாலே

வளைகுடா நாடுகளின் அமைப்பு முன்வைத்த யோசனைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தலைநகர் சனாவில் அரச உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஒரு மாத காலத்துக்குள் திரு. சாலே தனது பதவியை பிரதி அரசுத்தலைவருக்கு ஒப்படைப்பார். பதிலாக தன் மீது எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என எதிர்க்கட்சிகள் உறுதியளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த உடன்படிக்கையை ஐக்கிய அமெரிக்கா வரவேற்றுள்ளது. அமைதியான வழியில் ஆட்சி மாற்றம் இடம்பெற அனைத்துத் தரப்பினரும் முயற்சி எடுக்க வேண்டும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அரசுத்தலைவரின் இம்முடிவை வரவேற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் யாசின் நோமன், தேசிய அரசு ஒன்றை அமைக்கும் பட்சத்தில் அதில் பங்கேற்க மாட்டோம் எனக் கூறியுள்ளார்.


கடந்த 2 மாதங்களாக நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறைகளில் குறைந்தது 120 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்

தொகு