எத்தியோப்பியாவில் மிகப் பழமையான மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது
வெள்ளி, அக்டோபர் 2, 2009, எத்தியோப்பியா:
4.4 மில்லியன் ஆண்டுகள் பழமையான கல்லாகிய ஓர் எலும்புக்கூட்டின் எச்சங்கள்தான் இதுவரை கண்டெடுக்கப்பட்டதிலேயே மிகப் பழமையான மனித தொல்லுயிர் எச்சம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
1992 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டிருந்த 1.2 மீட்டர் உயரம் கொண்ட இந்த எலும்புக்கூடுதான் மனித பரிணாம வளர்ச்சியுடைய முதற்படியை கோடி காட்டுவதில் இதுவரையில் கிடைத்தவற்றிலேயே அதிகம் சிறப்பு வாய்ந்தது என்று சயன்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
இந்த ஆர்டிபித்திக்கசு எமது நேரடி மூதாதை இல்லையென்றால், அவள் அதற்கு மிக நெருங்கிய உறவினராக இருப்பாள். | ||
—ஆர்டிபித்திக்கசு திட்டக் குழு |
இந்தப் பெண் எலும்புக்கூட்டுக்கு அர்தி ("ஆர்டிபித்திக்கசு ரமிடசு", Ardipithecus ramidus) என்று பெயரிடப்பட்டுள்ளது.
லூசி என்று பெயரிடப்பட்ட ஓர் எலும்புக்கூடுதான், இதுவரை கிடைத்த ஆகப் பழமையான மனித மூதாதைய எச்சம் என்று கருதப்பட்டுவந்தது. ஆனால் அதனை விட பத்து லட்சம் ஆண்டுகள் பழமையானது அர்தி என்பது தற்போதைய ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.
மூலம்
தொகு- "Fossil finds extend human story". பிபிசி, அக்டோபர் 1, 2009