ஊழியர் வேலைநிறுத்தம், லுப்தான்சா வானூர்தி சேவைகள் பாதிப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

திங்கள், ஏப்பிரல் 22, 2013

செருமனியின் இலுப்தான்சா வானூர்தியின் அட்டவணைபடுத்தப்பட்ட 1700 பறப்புச்சேவைகளில் 20 சேவைகள் மட்டுமே இன்று திங்கட்கிழமை அன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இந்த முடிவு என நிருவாகம் அறிவித்துள்ளது. ஊதியம் தொடர்பாக ஊழியர்கள் இவ்வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளார்கள்.


கடந்த வாரம் இலுப்தான்சா நிருவாகம் ஊழியர்கள் 5.2% ஊதிய உயர்வு வேண்டுமென கேட்டிருந்ததை மறுத்துவிட்டது. மொத்தம் நடந்த 3 பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்து விட்டன. நிதி குறைப்பு நடவடிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்பதும் இந்த வேலை நிறுத்தத்தில் ஒரு கோரிக்கையாகும்.


இதற்கு முன்பு லுப்தான்சா நிருவாகம் நீதிமன்றம் மூலம் வேலை நிறுத்தம் செய்வதை தடுத்துள்ளது.


பிராங்பர்ட் நகரில் இருந்து 6 பறப்புச்சேவைகளும், முனிச் நகரிலிருந்து 3 பறப்புச்சேவைகளும் டசல்டோர்வ் நகரிலிலுருந்து 3 நீண்ட தூர பறப்புச்சேவைகளும் செயல்படும் என நிருவாகம் தெரிவித்துள்ளது.


செருமன்விங்சு மூலம் வானூர்திகள் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


மூலம்

தொகு