உருசியாவின் தாகெசுத்தான் மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர்

வெள்ளி, சனவரி 28, 2011

உருசியாவின் தாகெசுத்தான் மாநிலத்தில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பு ஒன்றில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் மூவர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


தாகெசுத்தான் குடியரசு

தாகெசுத்தானின் கசாவ்யூர்ட் நகரில் கரவான் உணவுச்சாலைக்கு முன்னர் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. உணவுச்சாலையில் இருந்தோரே கொல்லப்பட்டுள்ளனர்.


தாகெசுத்தானில் தனிநாடு கோரிப் போராடும் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் இம்மாநிலத்தில் நாள்தோறும் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக காவல்துறையினரையும், இராணுவத்தினரையுமே நோக்கியே இவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


இவ்வாரத்தில் மாஸ்கோவின் தமதேதவோ விமானநிலையத் தாக்குதலைத் தாகெசுத்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளே மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இத்தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம் தொகு