உருசியாவின் தத்தர்ஸ்தான் குடியரசில் விமானம் தரையில் மோதியதில் 50 பேர் உயிரிழப்பு
திங்கள், நவம்பர் 18, 2013
- 17 பெப்ரவரி 2025: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: உருசியாவில் மனநோய் மருத்துவமனையில் தீ, 38 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: சிரியாவிலிருந்து உருசிய படைகளில் பெரும் பகுதி விலகல் என உருசிய அதிபர் புதின் அறிவிப்பு
- 17 பெப்ரவரி 2025: சிரியாவின் வேதியியல் ஆயுதங்களை அழிக்க அமெரிக்காவும் உருசியாவும் ஒப்பந்தம்
உருசியாவின் கசான் நகர விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 50 பேரும் கொல்லப்பட்டனர்.

உருசியத் தலைநகர் மாஸ்கோவில் இருந்து தத்தர்ஸ்தான் குடியரசின் சகசான் நகரை நோக்கிச் சென்ற புறப்பட்ட போயிங் 737 விமானம் கசான் விமான நிலையத்தில் நேற்றிரவு உள்ளூர் நேரம் 07:30 மணிக்கு தரையில் மோதி வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் 44 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் தலைகீழாகக் கீழே வீழ்ந்ததாக அறிவிக்கப்படுகிறது.
விமானம் விபத்துக்குள்ளாகியதில் தொழில்நுட்பக் கோளாறா அல்லது விமானிகளின் தவறா எனக் கண்டறிவதில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இறந்தவர்களில் தத்தர்ஸ்தான் குடியரசின் அரசுத்தலைவரின் மகன், மற்றும் தத்தர்ஸ்தானின் நடுவண் புலனாய்வுத்துறையின் தலைவர் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். டொனா புல் என்ற பிரித்தானிய ஆசிரியை ஒருவரும் இறந்தவர்களில் ஒருவர் என ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
உருசிய அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் "இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
விபத்துக்குள்ளான விமானம் 1990 ஆம் ஆண்டில் இருந்து சேவையில் உள்ளது என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
கசான் நகரம் மாஸ்கோவில் இருந்து கிழக்கே 720 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
மூலம்
தொகு- crash plane 'fell vertically' at Kazan airport, பிபிசி, நவம்பர் 18, 2013
- Tatarstan Mourns Kazan Plane Crash Victims, ரியா நோவஸ்தி, நவம்பர் 18, 2013