உருசியத் தேர்தல்களில் பூட்டினின் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது
திங்கள், திசம்பர் 5, 2011
- 12 பெப்பிரவரி 2018: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி
- 25 திசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்
- 20 திசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்
- 19 மார்ச்சு 2016: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி
- 15 மார்ச்சு 2016: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.
உருசியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பிரதமர் விளாடிமிர் பூட்டினின் ஆளும் ஐக்கிய உருசியா கட்சி மொத்தமுள்ள 450 இடங்களில் 238 இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக மத்திய தேர்தல் அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு தேர்தல்களில் இக்கட்சி 315 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.
96% வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஆளும் கட்சி 49.67 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகலாக இக்கட்சி நாடாளுமன்றத்தில் தக்க வைத்திருந்த தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இப்போது இழந்துள்ளது.
அடுத்ந ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியடவிருக்கும் பூட்டினுக்கு இத்தேர்தல் தனது செல்வாக்கைச் சோதிக்கும் போட்டிக்களமாக இருந்தது.
உருசிய கம்யூனிஸ்ட் கட்சி 92 இடங்களைப் பெற்று இரண்டாவதாக வந்துள்ளது. கடந்த தேர்தல்களில் இது 57 இடங்களையே கைப்பற்றியிருந்தது. லிபரல் சனநாயகக் கட்சி 56 இடங்களை (2007 இல் 46) இடங்களைக் கைப்பற்றியது.
தேர்தல்களில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கோலோசு என்றழைக்கப்படும் ஒரேயொரு தேதல் கண்காணிப்புக் குழு 5,300 தேர்தல் முறைகேடுகள் பற்றிய முறைப்பாடுகள் தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2000 ஆம் ஆண்டு முதல் 2008 வரை பூட்டின் இரண்டு தடவைகள் உருசியாவின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். உருசிய அரசியலமைப்பின் படி அடுத்தடுத்து இரண்டு தடவைகள் மட்டுமே ஒருவர் அரசுத்தலைவராகப் பதவியில் இருக்க முடியும். இதனால் அவர் 2008 தேர்தல்களில் போட்டியிடவில்லை. இப்போது 2012 தேர்தல்களில் மீண்டும் போட்டியிடவுள்ளார்.
மூலம்
தொகு- United Russia loses seats but keeps majority in Duma elections, ரியாநோவஸ்தி, டிசம்பர் 5, 2011
- Putin's United Russia party suffers poll setback, பிபிசி, டிசம்பர் 5, 2011