ஈழப் போர்க்குற்றங்களை ஆவணப் படமாக வெளியிட்ட பிரியம்வதாவுக்கு தேசிய விருது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, மார்ச்சு 30, 2012

நான்காம் ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களைப் பதிவு செய்து ஆவணப் படமாக வெளியிட்ட இந்தியாவில் இருந்து வெளிவரும் 'ஹெட்லைன் டுடே’ பத்திரிகையின் புலனாய்வு ஊடகவியலாளர் பிரியம்வதா பஞ்சாபிகேசனுக்கு செய்தித் தொலைக்காட்சிக்கான தேசிய விருந்து வழங்கப்பட்டுள்ளது.


விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை தலைநகர் தில்லியில் இடம்பெற்ற போது ஹெட்லைன் டுடே பத்திரிகையின் சென்னை நிருபர் பிரியம்வதாவுக்கு சிறந்த புலனாய்வுப் பெண் நிருபர் என்ற மதிப்பு மிக்க தேசிய விருது அறிவிக்கப்பட்டது.


கடந்த ஆண்டு ஆகத்து மாதத்தில் இலங்கைக்குச் சென்று கள நிலைவரங்களை பதிவு செய்து From inside Sri Lanka's killing fields: I witnessed genocide என்ற தலைப்பில் செய்திப்படமாக இவர் வெளியிட்டிருந்தார். வன்னிப் பெருநிலப்பரப்பில் நடைபெற்ற பேரவலத்தினை பிரியம்வதா தனது மூன்று நாள் பயணத்தின் போது பதிவு செய்திருந்தார். ஹெட்லைன் டுடே தொலைக்காட்சி ஊடாக இவர் வெளியிட்ட கருத்துகள் இந்தியா எங்கணும் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தன.


மூலம்

தொகு