ஈழத்தமிழருக்காக தமிழகத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து இறந்தார்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், ஏப்பிரல் 19, 2011

இலங்கைத் தமிழர் விவகாரத்தில்மகிந்த ராசபக்ச அரசைக் கண்டித்து தமிழ்நாடு திருநெல்வேலியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.


நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியை அடுத்த சீகம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு (25) என்ற பொறியியலாளர் இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை கண்டித்தும், ராசபக்ச அரசின் அடக்குமுறையை கண்டித்தும் தீக்குளிப்பதாகக் கடிதம் எழுதி வைத்துள்ளார்.


நேற்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை, தன் மீது ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனாலும் இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்று விட்டது. இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி மயங்கி விழுந்தார். மயக்கம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


கிருஷ்ணமூர்த்தியின் இல்லத்துக்கு நேரில் சென்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.


மூலம்

தொகு