இஸ்ரேல் எகிப்து இடையில் புதிய தடைச் சுவர்

திங்கள், சனவரி 11, 2010


எகிப்திற்கும் இசுரேலிற்கும் இடையில் ஒரு சுவர் எழுப்புவதற்கு இசுரேலிய நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் சட்டவிரோத குடியேற்ற வாசிகளையும், ஆயுததாரிகளையும் தடைசெய்ய முடியும் என்று இஸ்ரேல் நம்புகின்றது.


எகிப்து-இசுரேல் எல்லை

இசுரேலிய பிரதமர் பென்சமின் நெத்தனியாகு கருத்துத் தெரிவிக்கையில் இந்த முயற்சி மூலம் யூதர்களையும் மக்களாட்சியையும் காக்க முயல்வதோடு தொடர்ந்தும் அகதிகள் வருகைக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.


கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் எகிப்து எல்லையூடாக அகதிகளாக இஸ்ரேலினுள் பிரவேசித்துள்ளனர். அதிகமாக எரித்திரியா அகதிகளும் அவர்களைத் தொடர்ந்து சூடான் மற்றும் எதியோப்பியா அகதிகளும் எகிப்து இஸ்ரேல் எல்லையூடாக இஸ்ரேலினுள் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


266கிமீ நீளமான இந்த சுவரை நிர்மாணிக்க உத்தரவிட்டதுடன் அதில் அதி நவீன கண்காணிப்புக் கருவிகளையும் நிர்மாணிக்க நெத்தன்யாகு பணித்துள்ளார். இந்த செயற்றிட்டம் சுமார் இரண்டு ஆண்டுகளில் $270 மில்லியன் செலவில் முடிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


2004 இல் இவ்வாறான சுவர்களை எழுப்புவது சட்டவிரோதமான செயல் என்று பன்னாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதேவேளை எகிப்தும் நிலவடி தடுப்புகளை காசா எல்லையில் அமைத்து வருகின்றது. இதன் மூலம் சுரங்கம் மூலம் நடைபெறும் ஆயுத கடத்தல்களைத் தடுக்க எகிப்து எதிர்பார்க்கின்றது.

மூலம்

தொகு