இலங்கை அதிபர் தன் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பதாக அறிவித்தார்
வெள்ளி, சனவரி 15, 2010
தனக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களை தான் குறைப்பார் என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வேளையிலேயே இந்தக் கருத்தை அதிபர் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை தொடர்பில் இங்கு தெரிவித்த ஜனாதிபதி, இம்முறை நான் ஜனாதிபதியானவுடன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குள்ள அநாவசியமான அதிகாரங்களை நீக்குவேனெனவும் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவைவிட அதிகமான தமிழ்க் கட்சிகள் தனக்கு ஆதவு தருவதாகவும், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளே உள்ள நாடாளுமன்று உறுப்பினரும் தனக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார். தமிழ் மக்களுக்காக 13ம் திருத்தம் மற்றும் ஒரு மேற்சபை (senate) அமைக்கப்படும் என்றும் இந்த சந்திப்பில் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஆயினும் பொலீஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும் உத்தேசம் இல்லை என்றும் தெரிவித்தார். இது குறித்து தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் அதிபர் மகிந்த இராஜபக்ச.
மூலம்
தொகு- President to reduce executive powers டெய்லி மிரர், 15 சனவரி, 2010
- Rajapaksa for ‘reducing unnecessary Presidential powers’ த ஹிந்து, 15 சனவரி, 2010
- இனங்கள் ஒற்றுமையுடன் வாழாவிடின் மீண்டும் ஒரு பேரனர்த்தம் ஏற்படும் ஆபத்து ஜனாதிபதி ராஜபக்ஷ எச்சரிக்கை, தினக்குரல், சனவரி 15, 2010