இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு
(இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்தார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஞாயிறு, சனவரி 24, 2010
தேர்தல் தொடர்பான செய்திகள்
இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க எதிர் வரும் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டு வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
இன்று காலையில் சந்திரிக்காவைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்ற சரத் பொன்சேகாவிடம் அவர் தனது ஆதரவைத் தெரிவித்தார் என டெய்லிமிரர் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இது பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவிருந்த போதும் சந்திப்புக்குச் சென்ற ஊடகவியலாளர்களை காவல்துறையினர் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
மூலம்
தொகு- CBK extends support to Fonseka டெய்லி மிரர் சனவரி 24, 2010