இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம் அமெரிக்காவிலும் நெதர்லாந்திலும் திரையிடப்பட்டது
ஞாயிறு, செப்டெம்பர் 18, 2011
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: சிறை விதிக்கப்பட்ட திசைநாயகத்துக்கு 2 பன்னாட்டு விருதுகள்
- 6 ஆகத்து 2014: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 2 ஆகத்து 2014: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
"இலங்கையின் கொலைக்களம்" ஆவணப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டதைத் அடுத்து இலங்கைக்கு தொடர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நான்காம் ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த ஈழத்தமிழர் இனப்படுகொலை பற்றிய பிரித்தானியாவின் சேனல்-4 கடந்த சூன் மாதத்தில் வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் எலத் தலைப்பிடப்பட்ட ஆவணப் படம் ஐக்கிய அமெரிக்காவின் மசாசுச்செட்ஸ் மாநில ஆட்சிப்பீடத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் ஏற்பாட்டில் இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது.
மாநில ஆட்சி உறுப்பினர்கள், கல்வி சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல்துறையினரும் ஆவணப்படத்தினை பார்வையிட வந்திருந்தனர். மாநில ஆட்சிப்பீட உறுப்பினரான ஜேசன் லக்சவிஸ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு விசாரணை கோரியும் ஐ.நா. நிபுணர்குழுவின் பரிந்துரையை வலியுறுத்தியும் மாநில ஆட்சிபீடத்தில் தீர்மானமொன்று விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நெதர்லாந்தில் உள்ள ஐரோப்பிய நீதிமன்றில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை நீக்கக் கோரி வழககுத் தாக்கல் செய்திருக்கும் பிரபல வழக்கறிஞர் விக்டர் கொப்பேயின் வேண்டுகோளுக்கிணங்க நீதிபதியின் அனுமதியுடன் நேற்று சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இலங்கையின் கொலைக்களம் ஆவணக்காட்சி திரையிடப்பட்டது. இக்காட்சியினை அங்கு வருகை தந்த வழக்கறிஞர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
மூலம்
தொகு- அமெரிக்காவில் இலங்கையின் கொலைக்களம் திரையிடப்பட்டது
- Dutch court to screen Channel 4 video on Sri Lanka, கொழும்புபேஜ், செப்டம்பர் 16, 2011
- நெதர்லாந்தில் தமிழர்களின் வழக்கு விசாரணை! நீதிமன்றில் இலங்கையின் கொலைக்களம் திரையிடப்பட்டது, தமிழ்வின், செப்டம்பர் 18, 2011
- Tamil Tigers: Terrorists or Freedom Fighters – Dutch court to decide, நெதர்லாந்து வானொலி, செப்டம்பர் 12, 100