இரு தமிழர்களுக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை

ஞாயிறு, சனவரி 24, 2010

விடுதலைப் புலிகளுக்காக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் இதர இராணுவ உபகரணங்களை வாங்க முயற்சித்தமைக்காக இரு தமிழர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் 26 மற்றும் 14 ஆண்டு சிறைத்தண்டனை தீர்ப்பு விதித்துள்ளது.


கனேடியக் குடிமக்களான இலங்கையைச் சேர்ந்த சதாஜன் சரச்சந்திரன் (30) மற்றும் யோகராசா நடராசா (54) ஆகிய இருவருக்கும் முறையே 26 மற்றும் 14 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


2006 ஆம் ஆண்டு ஆயுதங்கள் வாங்க முயற்சித்த போது அமெரிக்காவின் எஃப் பி ஐ புலனாய்வு அமைப்பு வைத்த பொறியில் நான்கு பேர் சிக்கி கைதானார்கள்.


இதேவேளை இந்த தண்டனையின் மூலம் தீவிரவாத அமைப்புகளையும் அதன் ஆதரவாளர்களையும் முழு சட்டத்தையும் பயன்படுத்தி கட்டுப்படுத்த தாம் நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அமெரிக்க சட்டத்தரணியான பென்டன் கெம்பல் தெரிவித்துள்ளார்.


இவர்களுடன் கைதான மேலும் இருவருக்கும் தீர்ப்பு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலம்