இரசியாவில் இரவு விடுதியில் வெடி விபத்து: 102 பேர் உயிரிழப்பு

சனி, திசம்பர் 5, 2009

இரசியாவின் யூரல் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பேர்ம் நகரில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 102 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரசியாவின் அரசு தொலைக்காட்சியான வெஸ்டி டிவி.யில் (VESTI TV) ஒளிபரப்பப்பட்ட செய்தியில் நேற்றிரவு நடந்த வெடி விபத்தில் 135 பேர் காயமடைந்ததாகவும், இதில் 85 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


இரவு விடுதியின் 8வது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பட்டாசு வெடிக்கப்பட்டதாகவும், இதில் வெடி விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் நெரிசலிலும், தீயிலும் சிக்கி பலியானதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


1.2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பேர்ம் நகர் மாஸ்கோவில் இருந்து 1,400 கிமீ கிழக்கே அமைந்துள்ளது. இது இரசியாவின் 6வது பெரிய நகரமாகும்.

மூலம்

தொகு