இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
புதன், பெப்பிரவரி 15, 2017
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 15 திசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது
இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் தன்னுடைய பிஎசுஎல்வி-37 ஏவுகலம் மூலம் விண்ணுக்கு ஏவியது இதற்கு முன் உருசியா 2014ஆம் ஆண்டு யூன் மாதம் 37 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியதே சாதனையாக இருந்தது.
கார்ட்டோசாட் எனப்படும் செயற்கை கோளை இந்தியா ஏவியதுடன் 103 செயற்கை கோள்களையும் அதனுடன் சேர்த்து ஏவியது. ஏவப்பட்டதில் மொத்தம் மூன்று இந்திய செயற்கை கோள்கள், 96 அமெரிக்க செயற்கை கோள்கள், தலா ஒரு செயற்கை கோள்கள் இசுரேல், நெதர்லாந்து, அமீரகம், கசகசுத்தான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவை.
அமெரிக்காவினதும் மற்ற நாடுகள் உடையதும் மிகச்சிறிய செயற்கை கோள்கள்.ஏவப்பட்ட செயற்கை கோள்களில் பெரும்பாலானவை பிளேணட் என்ற அமெரிக்க நிறுவனத்தினுடையது.
பிஎசுஎல்வி ஏவுகலம் இந்திய நேரம் காலை 9.28 மணிக்கு சிறிகரிகோட்டாவின் சதீசு தவான் விண்வெளி தளத்திலிருந்து ஏவப்பட்டது. 1380 கிகி மொத்த எடையை செயற்கை கோள்கள் கொண்டிருந்தன.
மூலம்
தொகு- India launches record 104 satellites in single mission] பிபிசி 15 பிப்ரவரி 2017
- India Launches Record-Breaking 104 Satellites on Single Rocketஇசுபேசு 15 பிப்ரவரி 2017
- ISRO satellite launch: Proud moment for India, 104 satellites placed in orbit இந்தியன் எக்சுபிரசு 15 பிப்ரவரி 2017