இந்தியாவின் கோவா மாநிலத்தில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்
ஞாயிறு, சனவரி 5, 2014
கோவாவில் இருந்து ஏனைய செய்திகள்
இந்தியாவில் கோவாவின் அமைவிடம்
இந்தியாவின் மேற்கு மாநிலமான கோவாவில் நிர்மாணிக்கப்பட்டு வந்த ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று நேற்று சனிக்கிழமை இடிந்து வீழ்ந்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
இடிபாடுகளிடையே மேலும் பலர் சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கனக்கோனா நகரில் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
கட்டடத் தொழிலாளிகள் உட்பட குறைந்தது 40 பேர் விபத்து நடந்த நேரத்தில் அங்கு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இராணுவத்தினரும் மீட்புப் பணியாளர்களுக்கு உதவியாக அங்கு சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கட்டடம் இடிந்ததற்கான காரணம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. முதலமைச்சர் மனோகர் பரிக்கார் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
மூலம்
தொகு- India Building Collapse Kills at Least 14, வொயிஸ் ஒஃப் அமெரிக்கா, சனவரி 4, 2014
- Construction workers die in Goa building collapse, பிபிசி, சனவரி 5, 2014