இசிபேசு எக்சு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணுக்கு சென்ற ஏவூர்தியை கடலிலுள்ள தளத்தில் இறக்கியது

This is the stable version, checked on 9 ஏப்பிரல் 2016. 2 pending changes await review.

சனி, ஏப்பிரல் 9, 2016

ஏவூர்தி திரும்ப புவிக்கு திரும்பும் வரைபடம்

இசிபேசு எக்சு நிறுவனம் தன்னுடைய பால்கன் 9 ஏவூர்தி மூலம் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு உப்பக் கூடிய நெகிழி அறையை வெற்றிகரமாக சேர்த்தது.


விண்ணுக்கு சென்ற ஏவூர்தியின் முதன்மை ஏவு கலத்தை கடலிலுள்ள மிதக்கும் தளத்தில் வெற்றிகரமாக முதன்முறையாக தரையிறக்கியது. இதன் மூலம் அக்கலத்தை திரும்ப பயன்படுத்த முடியும் இதனால் விண்ணுக்கு ஏவூர்தியை அனுப்பும் செலவு குறையும். உப்பக் கூடிய நெகிழி அறை அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இரண்டு ஆண்டுகள் சோதனை செய்யப்படும். இது செவ்வாய் கோளில் மனிதன் தங்க உதவக்கூடியதாக கருதப்படுகிறது.


2015 யூன் மாதம் நடந்த விபத்திற்கு பின் நாசாவினால் இசுபேசு எக்சு நிறுவனத்தால் விண்ணுக்கு அனுப்பப்படும் முதல் ஏவு முயற்சியாகும்.


பால்கன் ஏவூர்தி புளோரிடாவிலுள்ள கேப் கார்னிவல் வான் படை தளத்திலிருந்து ஏவப்பட்டது. நான்கு முறை ஏவூர்தியின் முதன்மை ஏவு கலத்தை கடலிலுள்ள மிதக்கும் தளத்தில் இறக்கமுயன்றது தோல்வியில் முடிந்தது இப்போதே வெற்றிகிடைத்துள்ளது.

பால்கன் ஏவூர்தி விண்ணுக்குசெல்கிறது

கடந்த ஆண்டு திசம்பர் தரையிலுள்ள தளத்தில் ஏவூர்தியின் முதன்மை ஏவு கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது 1400 கிலோ எடையுடையதாகும். ஒரு மாதகால அளவில் நெகிழி அறையை உப்பச்செய்வார்கள்.



மூலம்

தொகு