அமெரிக்காவில் வீசிய சூறாவளிகளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
வெள்ளி, மே 27, 2011
- 15 பெப்பிரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
- 2 சனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்
- 7 திசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது
அமெரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள ஓக்லஹாமா, கன்சாஸ் மற்றும் அர்கன்சா மாநிலங்களில் வீசிய பெரும் சூறாவளியால் அங்கு இறந்தோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளது.
அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் கடந்த 22ம் திகதி மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 122 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஒக்லஹாமா நகரின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப் புறங்களைத் தாக்கியது. சூறாவளி மணிக்கு 243 கி.மீ. வேகத்தில் வீசியுள்ளது.
ஒக்லகாமா நகரின் கனடியப் பகுதியில் தரைமட்டமாகிப் போன வீடுகளைத் தவிர, மீதமுள்ள 58 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அவை இருளில் மூழ்கியுள்ளன. அதேபோல, கன்சாசு மற்றும் அர்கன்சா மாநிலங்களையும் சூறாவளி தாக்கியுள்ளது.
இன்னும் சில நாட்களில் வலுக்கும் இந்தப் புயல், வடகிழக்காகப் பயணிக்கக் கூடும் என்று, அமெரிக்க வானிலை மையம் அறிவித்துள்ளது.
சூறாவளி பயணித்த பகுதியில் இருந்த வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன. பல இடங்களில் வாகனங்கள் மற்றும் மரங்கள் கடும் வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன.
அமெரிக்காவைப் பொறுத்தவரை இம்மாதிரி சூறாவளிப் புயல் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து தற்போது தாக்கி வருவதால் சேதம் அதிகமாகியுள்ளது.
தொடர்புள்ள செய்திகள்
தொகு- அமெரிக்காவின் மிசூரியில் சூறாவளி, 30 பேர் உயிரிழப்பு, மே 23, 2011
மூலம்
தொகு- அடுத்தடுத்து சூறாவளி: பலி 200 ஐ தாண்டியது, தினமலர், மே 26, 2011
- அமெரிக்காவில் அடுத்தடுத்து சூறாவளி; பலியானோர் எண்ணிக்கை 200 தினகரன், மே 27, 2011