அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலங்களில் பலத்த சூறாவளி, 37 பேர் உயிரிழப்பு

ஞாயிறு, மார்ச்சு 4, 2012

ஐக்கிய அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வீசிய பலத்த சூறாவளியில் சிக்கி குறைந்தது 37 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். பலரைக் காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியானா மாநிலத்தில் சூறாவளியின் தாக்கம்

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலங்களான அலபாமா, ஜியார்ஜியா, கென்டக்கி, இன்டியானா, ஒகையோ ஆகியவற்றில் வீசிய கடும் சூறாவளி காற்றின் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மின்சாரம், மற்றும் தொலைத்தொடர்பு ஆகியன துண்டிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 90 சூறாவளிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


சூறாவளிகள் தாக்குவது அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சியாகும். ஆனாலும், இக்காலப்பகுதியில் இவ்வாறான கடுமையான சூறாவளி நிகழ்வது அபூர்வம் எனக் கூறப்படுகிறது. வழக்கமாக மார்ச்சு முதல் மே மாதம் வரை தென் பகுதியில் அதிகமாகவும், அதன் பின்னர் வடக்கே சூறாவளிகள் வீசும். கடந்த ஆண்டு மட்டும் 500 பேர் வரையில் சூறாவளியின் தாக்கத்தினால் கொல்லப்பட்டனர்.


மூலம்

தொகு