அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் மீது ஆப்பிரிக்க ஒன்றியம் குற்றச்சாட்டு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், மே 28, 2013

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆப்பிரிக்கர்களை குறி வைத்து செயல்படுவதாக ஆப்பிரிக்க ஒன்றியம் குற்றச்சாட்டியுள்ளது.


அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கென்யாவின் அதிபர் கென்யட்டாவை மனிதகுலத்துக்கு எதிராக குற்றம் புரிந்தவர் என்று வழக்கு தொடர்ந்து நடத்துவதற்கு ஆப்பிரிக்க ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக எத்தியோப்பியாவின் பிரதமர் தெரிவித்தார். தனது இக்கருத்தை ஐக்கிய நாடுகளின் கவனத்திற்கு ஆப்பிரிக்க ஒன்றியம் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


2013 மார்ச் மாதம் நடந்த கென்யாவின் அதிபர் தேர்தலில் 50.07% வாக்குகள் பெற்று கென்யட்டா வெற்றி பெற்றார், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அவர் மீது குற்றம் சுமத்தியது தேர்தலில் அவருக்கு ஆதரவை பெருக்கியதாக தேர்தல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பல வாக்காளர்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் செயல் கென்யாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயலாக கருதுகின்றனர்,


அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 99% ஆப்பிரிக்கர்கள் என்றும் அது இந்த அமைப்பில் குறையிருப்பதை காட்டுவதாகவும் எத்தியோப்பிய பிரதமர் தெரிவித்தார்.


வில்லியம் ருடோவும் கென்யட்டாவும் 2007ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு நடந்த வன்முறையை தூண்டிவிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அக்கலவரத்தில் 1000 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் 600,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறினர் என்றும் கூறப்படுகிறது. அப்போது எதிர் முகாம்களில் இருந்த ருடோவும் கென்யட்டாவும் 2013 தேர்தலில் இணைந்து செயல்பட்டார்கள். ருடோ துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


கென்யட்டாவும் ருடோவும் கென்ய நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டால் சாட்சிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்று பாதிக்கப்பட்டவர்கள் 150 பேர் சார்பாக வாதாடும் கென்ய வழக்குரைஞர் கூறுகிறார்.



மூலம்

தொகு